டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஹிந்துக்கள் மீது முஸ்லிம் வன்முறை கும்பலின் கல் வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறைகளை நிகழ்த்தியதுடன் உச்சபட்சமாக துப்பாக்கி சூடும் நடத்தியது. இவ்வழக்கை டெல்லி காவல்துறை விசாரித்து வருகிறது, இந்நிலையில், இந்த யாத்திரையை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்காற்றிய 5 ஹிந்துக்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வன்முறைக்குப் பிறகு காவலர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். குற்றம் குறித்த எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் எங்கள் வீட்டு ஆண்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தேர் மிகவும் சிதிலமடைந்துவிட்டது என கூறினார். இந்த கைது நடவடிக்கைக்கு சற்று முன், ஜமியத் உலமா இ ஹிந்தின் பொதுச் செயலர் அப்துல் ராஜிக் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினருடன் பேசினர். அதன்பிறகே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. தங்களை ஏழைகளின் உதவியாளர்கள் என்று வர்ணித்துக்கொள்ளும் ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு, இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்படும் முஸ்லிம்களுக்கு சட்ட உதவிகளையும் செய்து வருவதாகவும் இவ்வழக்கிலும் உதவி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.