உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.கவில் சரியாக செயல்படாத அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டவர்கள் என பலவித காரணங்களால் சிலர் அடுத்த தேர்தலுக்கு சீட் தரப்படாமல் ஓரம்கட்டப்பட்டனர். இவர்களை எல்லாம் தேடிப்பிடித்து அழைத்துவந்து தனது கட்சியில் சேர்த்து வருகிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். உ.பி’யில் பா.ஜ.க விக்கெட் ஒவ்வொன்றாக சரிவதாக இங்குள்ள சில அரசியல்வாதிகள்கூட இதற்கு அறிக்கை வெளியிட்டு சந்தோஷப்பட்டனர். நோபாலில் விழும் விக்கெட்டுக்கு மதிப்பில்லை என அவர்களுக்குத் தெரியவில்லை பாவம். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ், டெல்லி சென்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், பா.ஜ.கவுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்சியின் சாதனைகள், செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரதமர் மோடியின் பணிகள் என்னை ஈர்த்தது. தேசம்தான் முதல் பணி என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது’ என்று கூறியுள்ளார். நோ பாலில், விக்கெட்டை பொறுக்கிவந்த அகிலேஷ் யாதவுக்கு தங்கள் வீட்டு மருமகளே பா.ஜ.கவில் இணைந்தது கண்டிப்பாக பேரதிர்ச்சியாக இருக்கும். இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.