தேசிய கொடியை மாற்றும் திட்டம் இல்லை

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, தற்போதைய தேசியக் கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இதற்கு காஷ்மீர் பா.ஜ.க மறுப்பு தெரிவித்துள்ளதுடன் மெகபூபா முப்தியின் ஆதாரமற்ற இந்த கருத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்கூர், “மெகபூபா முப்தி, பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கை கண்டு விரக்தியில் பேசி வருகிறார். பா.ஜ.கவை பொறுத்தவரை, ‘முதலில் தேசம், இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் தனிநபர்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கொடிக்காக எந்த தியாகமும் செய்ய பா.ஜ.க தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை. அப்படி சொல்வது அபத்தமானது. தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்” என கூறினார்.