கடந்த 2018ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதற்கிடையே 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் என்று ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்லையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திராவுக்கான பா.ஜ.க இணை பொறுப்பாளர் சுனில் தியோதர், “தெலுங்கு தேசத்துடன் கூட்டணி கிடையாது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை பொறுத்தவரை, ஆந்திர முதல்வர் என்ற முறையில் ஜெகன்மோகன் ரெட்டியை பிரதமர் மோடி சந்தித்தார். தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டுமே குடும்ப அரசியல் மற்றும் ஊழல் கட்சிகள். இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான். இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது” என்று கூறினார்.