காஷ்மீரில் 90’களில் முஸ்லிம் ஜிஹாதிகள் அங்கு வாழ்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள் உட்பட பல ஹிந்துக்கள் மீதுகொடூர வன்முறையை அரங்கேற்றினர். இதனை அன்றைய மத்திய மாநில அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன. இதனால் கொல்லப்பட்டவர்கள், கற்பழிக்கப்பட்டவர்கள், சொத்துக்களை இழந்து சொந்த மன்ணிலேயே அகதிகள் ஆனவர்கள் ஏராளம். இந்த உண்மைக் கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். அவரது கணக்கை டுவிட்டர் நிர்வாகம் சமீபத்தில் முடக்கியது. ‘விதிமீறல்’ என காரணம் கூறப்பட்டபோதிலும் அவரது டுவிட்டர் கணக்கில் அப்படிப்பட்ட விதி மீறல்கள் ஏதும் காணப்படவில்லை. டுவிட்டரின் இந்த செயல்பாடு அதன் ஹிந்து விரோத, தேச விரோத செயல்பாடுகள், பிரிவினைவாத ஆதரவு எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள அபிரகாமிய இடதுசாரி நகர்ப்புற நக்சல்களின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. டுவிட்டர் இப்படி செயல்படுவது முதல்முறையல்ல என்பது நினைவு கூரத்தக்கது.