காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் புதியத் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர், ‘விவசாய போராட்டத்தை முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சிறப்பாகக் கையாண்டார். வேறு யாராவது முதலமைச்சராக இருந்திருந்தால் இந்நேரம், பஞ்சாப் அரசு, மத்திய அரசைவிட அதிகமான பிரச்சனையை எதிர்கொண்டிருக்கும். அமரீந்தர் சிங், அவர்களை அற்புதமாகக் கையாண்டு டெல்லிக்கு அனுப்பி போராட வைத்தார்’ என கூறியுள்ளார். சுனில் ஜாகரின் இந்த கூற்று விவசாயப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் பின் நின்று இயக்குகிறது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது. இந்த விவசாய போராட்டம் நடக்கும் இடங்கள் தற்போது கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், அடிதடி போன்றவை அடிக்கடி நடைபெறும் குற்றவாளிகளின் சொர்கபுரியாகவே மாறி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.