மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரக போராடி வரும் விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்தை ஏ.பி.பி செய்தி சேனலுக்காக ரூபிகா லியாகத் நேர்கானல் நடத்தினார். அதில் ரூபிகா கேட்ட நிரூபணங்களுடன் கூடிய ஆணித்தரமான கேள்விகள் எதற்கும் ராகேஷ் திகாயத்தால் பதில் அளிக்க முடியவில்லை.
விவசாய சட்டங்களில் எந்த பிரிவு உங்களுக்கு பிரச்சனை என்கிறீர்கள் என்ற கேள்வியால் ராகேஷுக்கு விவசாய சட்டத்தை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்பது நிரூபணமானது. விவசாய சட்டங்களால் எத்தனை மண்டிகள் மூடப்பட்டன, விவசாயி நிலங்களை கார்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கப் போகிறது என்ற உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன என்பது உள்ளிட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் திண்டாடினார் திகாயத். பின்னர், நீங்கள் அரசுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் என பத்திரிகையாளர் மீது பழிசுமத்தி தப்பிக்க பார்த்தார்.
இந்த நேர்காணலில், ராகேஷ் திகாயத் பின்னணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவு உள்ளது, அவர்கூவிவசாய சட்டங்கள் குறித்து ஒன்றுமே தெரியவில்லை, அவர் விவசாயி அல்ல விவசாயி என்ற பெயரில் இருக்கும் வியாபாரி, போராட்டங்களின் பின்னணியில் வேறு பல நோக்கங்கள் உள்ளன என்பதும் தோலுரித்துக் காட்டப்பட்டது. முன்னதாக, நடிகை ஸ்வரா பாஸ்கரின் சி.ஏ.ஏ பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியவர் பத்திரிகையாளர் ரூபிகா லியாகத் என்பது குறிப்பிடத்தக்கது.