மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கட்சி தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஏப்ரல் 10ம் தேதி ராம நவமியையும் ஏப்ரல் 16ம் தேதி அனுமன் ஜெயந்தியையும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகின்றனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மத்திய பிரதேச பா.ஜ.க மூத்த தலைவர் பங்கஜ் சதுர்வேதி, ராமரும் ராமர் பாலமும் கற்பனை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரித்தனர். தற்போது ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தியை கொண்டாட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ராமரை இகழ்ந்த அவர்கள் ஸ்ரீராம நவமியை கொண்டாடுவது ஏன்? இது அவர்களின் கபட நாடகம்’ என தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹிந்துக்களின் வாக்குகளை எப்படியாவது கவர வேண்டும் என்ற நோக்கிலேயே காங்கிரஸ் கட்சி ஸ்ரீராமநவமியை கொண்டாடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.