கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் மக்களிடம் தேவையற்ற பயத்தை பரப்பிய காங்கிரஸ் கட்சி, தற்போது தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் துரிதப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறது. அதே போல, மற்ற நாடுகளில் அவதிப்படும் ஹிந்து, சீக்கிய சிறுபான்மையினருக்கு பாரதத்தில் குடியுரிமைத் தந்து காக்க பா.ஜ.க அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்தது காங்கிரசும் அதன் கூட்டணியில் உள்ள தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளும். ஆனால், அதே காங்கிரஸ் தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து, சீக்கியர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்துவர கோரிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயவீர் ஷெர்கில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். இவர் சி.ஏ.ஏ சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.