மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட, தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். கோயில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை. மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்ற காரணத்தினால், கோயில் நகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது. தீவிபத்தினால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும். அடுத்தாண்டு மீனாட்சி கோயில் கும்பாபிஷேக பணிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் சொத்துக்களை அபகரித்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.