குறிவைக்கப்படும் மேப்பட்டியான்

ஜனவரி 14ம் தேதி வெளியான மலையாளத் திரைப்படமான ‘மேப்பாடியான்’ திரைப்படத்தில் சேவாபாரதி ஆம்புலன்ஸ், ஹனுமான் சிலை போன்ற ஹிந்து சம்பந்தப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வளவுதான் கேரள இடதுசாரிகளும் முஸ்லிம்களும் அந்தத் திரைப்படம் ‘வலதுசாரி அரசியலை’ ஆதரிப்பதாகக்கூறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

கேரள திரைப்படத்துறை, கம்யூனிச, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் கைப்பிடியில்தான் முழுக்க முழுக்க உள்ளது. இவர்கள் தங்களது அனைத்துத் திரைப்படங்களிலும் ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் கீழ்தரமாக சித்தரிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், விஷ்ணு மோகன் இயக்கியுள்ள இத்திரைப்படம், ஹிந்துக்களைக் கேலி செய்யவில்லை. ஒவ்வொரு பெருமைமிக்க ஹிந்துவும் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு எளிய கதை என்றே கூறப்படுகிறது. இதனால், இந்த படம் அவர்களின் கண்ணை உறுத்துகிறது.

இந்தவிமர்சனங்களுக்கு நேராக பதிலளித்த இதன் கதாநாயகன் உன்னி முகுந்தன், ‘சேவா பாரதி ஆம்புலன்ஸ் சித்தரிப்பில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. சமூகத்தின் ஒரு பிரிவினர் வெறுப்புப் பிரச்சாரத்தை பரப்புவதையும் கலை சுதந்திரத்தை இழிவுபடுத்துவதையும் பார்ப்பது வேதனை அளிக்கிறது. கொரோனா நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்ததால் அனைத்து ஆம்புலன்ஸ்களும் பிஸியாக இருந்தன. சிலர், படப்பிடிப்பிற்கு ஆம்புலன்ஸ் வழங்க பெரும் தொகை கேட்டனர். ஆனால், சேவா பாரதி இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கியது.

பேரிடர்களின் போது கேரள மாநிலத்திற்கு உதவி தேவைப்படும் ஒவ்வொரு முறையும் சேவா பாரதி விரைந்து உதவுகிறது. காவல்துறை, தீயணைப்புப் படைக்கு முன்பே சேவா பாரதிதான் முதலில் வந்ததை நான் பார்த்திருக்கிறேன். வனவாசிகள், பட்டியலினத்தவர், உட்பட பாரதத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சேவா பாரதி செயல்படுகிறது. இலவச மருத்துவ உதவி, இலவச கல்வி, தொழில் பயிற்சி போன்ற சமூக சேவை திட்டங்களை செயல்படுகிறது. இது கேரளாவில் அனைவருக்கும் தெரியும்.

என்னுடைய சிறுவயதில் இருந்தே ஹனுமானை எனக்கு பிடிக்கும். நான் உடல் தகுதிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நபர், எனக்கு அனுமன் தான் முன்மாதிரி. மக்கள் ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் படத்தில் என்ன செய்தேன் என்பதற்கான தெளிவான காரணம் என்னிடம் உள்ளது’ என்றார்.