காழ்ப்புணர்ச்சி போராட்டம்

தர்மபுர ஆதீனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். அப்போது, மணமந்தல் பகுதியில் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மேலும் சில உதிரி இயக்கங்கள் சார்பில் ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீட் உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும், ஆளுநர் பாதுகாப்பிற்குச் சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர். ஏற்கனவே போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை தடுப்பதற்கு காவல்துறையினர் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.