ஹிமாலயாவுக்கு எதிரான போராட்டம்

புகழ்பெற்ற ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு நிறுவனமான ஹிமாலயா, தனது தயாரிப்புகளில் ஹலால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்துவதாகக் கூறும் புகைப்படத்தை சமூக ஊடகப் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இஸ்லாமிய சட்டம், ஷரியாவுக்கு இணங்குகிறோம். இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் அதில் இல்லை. ஹலால் சான்றிதழ் தொடர்பான விஷயங்களுக்காக முஸ்லிம்கள் உட்பட மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய உள்ளக ஹலால் மேலாண்மைக் குழுவை நிறுவனம் அமைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சமூக உடகங்களில் ஹிமாலயாவுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. #BoycottHimalayaProducts என்ற ஹேஷ்டேக்கை மக்கள் டிரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கர்நாடகாவில் சமீபத்தில் ஹலால் சர்ச்சை வெடித்து, சமூக வலைதளங்களில் #BoycottHalal என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஹிமாலயா மருந்து நிறுவனத்தின் வேம்பு, துளசி, லசுனா காப்ஸ்யூல் மற்றும் சப்ளிமென்ட்களில் ஹலால் சான்றளிக்கப்பட்ட இறைச்சி உள்ளது, அவற்றின் காப்ஸ்யூல்கள் பசுக்கள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பெறப்படும் ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படுகின்றன என்பதை சமூக ஊடகப் பயனர் ஒருவர் ஹிமாலயாவின் மின்னஞ்சல் பதில் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 1930ல் முஹம்மது மனால் என்பவர் ஹிமாலயா நிறுவனத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.