வலுவான நாணயம் தேசத்தின் வலிமை

சமுதாயத்தின் ஒரு பிரிவினர் அல்லது பலவீனமான நாணய மதிப்பு ஏற்றுமதியை ஆதரிக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், ஒரு நாட்டின் வலுவான நாணய மதிப்பு அந்நாட்டின் வலிமையை பிரதிபலிக்கிறது. அது ஏற்றுமதிக்கும் உகந்தது என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் பாரதம், பொருட்களின் நிகர இறக்குமதியாளராக உள்ளது. நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக வளர விரும்பினால், நமது பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி குறைந்தபட்சம் ஒரு டிரில்லியன் டாலர்களாக இருக்க வேண்டும். நாம் கச்சா எண்ணெயை இறக்குமதியை செய்தாக வேண்டும். எனவே, அதனை ஈடுகட்ட நாம் நமது ஏற்றுமதிகளை உயர்த்த வேண்டும். இதன்மூலம் நமது இறக்குமதிகளுக்கு தொடர்ந்து நிதியளிப்பதுடன், வரும் நாட்களில் ரூபாயை வலுப்படுத்தவும் முடியும். ஆசியா, ஐரோப்பா பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல், பிப்ரவரி, 2022 வரை, இந்த நிதியாண்டின் 11 மாதங்களில் நாம் 374 பில்லியன் டாலர்கள்  பொருளாதாரத்தை எட்டியுள்ளோம். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் நமது இலகான 400 பில்லியன் டாலரையும் தாண்டி நாம் வளர முடியும் என நம்புகிறேன்’ என கூறினார்.