தூத்துக்குடி, திரேஸ்புரத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு நேற்று இடித்துத் தள்ளியது. உத்தர பிரதேச அரசு, ரௌடிகள், தாதாக்களின் வீடுகளை இடித்துத்தள்ளி அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசோ, மாற்று மதத்தினரின் துணையுடன் தமிழகத்தில் கோயில்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இடித்துத்தள்ளி, தனது சிறுபான்மையினர் மீதான விஸ்வாசத்தை பறைசாற்றி வருகிறது. வருகிறது. விதிமுறை மீறல், ஆக்கிரமிப்பு என அரசு என்னதான் இதற்குக் காரனம் கூறினாலும், இதே நடவடிக்கையை மாற்றுமத விதிமீறல் வழிபாட்டுத்தலங்கள் மீது எடுக்காமல் தமிழக அரசு திட்டமிட்டுத் தவிர்த்து வருவதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை.