டிஸ் இன்ஃபோ ஆய்வகம் என்ற அமைப்பு, காஷ்மிர் பிரச்சனையில் பாகிஸ்தான் பங்கு, மேற்கத்திய நாடுகளில் காஷ்மீர் பற்றிய தவறான பிரச்சாரத்தை பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் எவ்வாறு பரப்புகின்றன, காஷ்மீரில் பிரச்சனையை அவை எப்படி எல்லாம் தூண்டுகின்றன, அதனால் பாகிஸ்தான் எப்படி ஆதாயம் அடைகிறது என்பதை கடந்த ஆகஸ்ட் 3ல், “காஷ்மீர் இன்க்: ஒரு மோதல் தொழில்” (Kashmir Inc: A Conflict Industry) என்ற தலைப்பில் வெளியிட்டது. அதனை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த அமைப்பின் நீல நிற டிக் (சரிபார்ப்பு நிலை) அந்தஸ்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. மேலும், அந்நிறுவனத்தின் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் 40,000 சைபர் தாக்குதல்கள் நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனைக்குழு உறுப்பினர் அர்ஸ்லான் காலித், டிஸ் இன்ஃபோ ஆய்வகத்தை தாக்கிக் கருத்துப் பதிவிட்டார். இவை அனைத்தும் எதேச்சையாக நடைபெற்றதாகத் தெரியவில்லை, இவற்றின் மூலப்புள்ளி ஒன்றுதான் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.