ஒரு பேரணியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் உடையணிந்த ஒருவரை, ஒரு கும்பல் கயிறு கட்டி இழுத்து வந்து தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. ஹத்ராஸ் சம்பவத்தின் போது வகுப்புவாத கலவரத்தைத் தூண்டியது, வழக்கை திசைதிருப்ப முற்பட்டது, முறைகேடன நிதி வசூல் போன்ற விவகாரங்களால் கைதுசெய்யப்பட்ட 8 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் செயல்பாட்டாளர்களில் முக்கிய நபரான சித்திக் கப்பன் கைதை கண்டித்தே இந்த பேரணியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. இந்த அமைப்பு பி.எப்.ஐ அமைப்பின் மாணவர் பிரிவாகும். ஜமாத் இ இஸ்லாமியை சேர்ந்த குழுவால் உருவாக்கப்பட்ட தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ‘சிமி’ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான் பி.எப்.ஐ. இந்த அமைப்பு தொடர்ந்து பல்வேறு தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பல்வேறு வழக்குகள் இந்த அமைப்பினர் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.