ஆர்.எஸ்.எஸ் பலப்படுத்தப்பட வேண்டும்

கேரள மாநில ஆர்.எஸ்.எஸ் எடப்பள்ளி நகர் ஏற்பாடு செய்திருந்த விஜயதசமி விழாவில் உரையாற்றிய பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி பெஞ்சமின் கோஷி, ‘நமது அண்டை நாடுகளில் செயல்படுவது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் பரவாமல் தடுக்க ஆர்.எஸ்.எஸ் பலப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினரை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தவும், நாட்டின் சில பகுதிகளில் வன்முறையை நிகழ்த்தி அதன் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது சுமத்தவும் ஒரு கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உழைக்கும் தேசபக்தர்களின் ஒரு சிறந்த அமைப்பு. அது, இளைஞர்களுக்கு அப்படியான பயிற்சியைதான் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்பின் ஆதரவாளரும் அல்ல.

ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த நான் ஒரு கிறிஸ்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசிய பார்வையுடன் வளர்ந்து வருகிறது, அது நம் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. கடவுளின் அன்பு மற்றவர்களுக்குப் பரவ வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல்வேறு மாநிலங்கள், பல்வேறு பழக்கவழக்கங்கள், மதங்கள், ஜாதிகள் போன்றவற்றைப் பாதுகாத்து, நாடு முழுவதையும் முன்னோக்கி நகர்த்த முயல்கிறது. இந்த நோக்கத்திற்காகவே இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

சேவா பாரதி அமைப்பு மழை, வெள்ளம், கொரோனா பாதிப்பு காலங்களில் அனைவருக்கும் உதவியது. இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நவராத்திரி கொண்டாட்டங்கள் நம் மனதை மறைக்கும் இருளை அகற்றட்டும் என கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.