உயிருக்கு பயந்து ஓடும் ரௌடிகள்

2006ம் ஆண்டு உமேஷ் பால் கடத்தல் வழக்கில் அத்திக் அகமது மற்றும் இருவர் குற்றவாளிகள் என எம்.பி எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இந்த சூழலில், பாட்டிலிங் ஆலையின் பூமி பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு வருகிறது. இத்தகைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது,. இதனால், மாநிலத்தில் உள்ள ரௌடிகள், குண்டர்கள், சட்டவிரோத பேர்வழிகள், மக்களை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள், கடத்தல்காரர்கள் எல்லாம் தங்கள் பேண்ட்டை நனைத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பு சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள் இப்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதை மக்கள் பார்க்கிறார்கள். நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை விதிக்கும்போது, அவர்களின் ஈரமான உடைகள் மக்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் மாஃபியாக்கள், மக்களை பயமுறுத்தியது, தொழிலதிபர்களை மிரட்டியது, வணிகர்களை கடத்தி வந்தது. ஆனால் இன்று அவர்கள் தங்கள் தவறுகளுக்கு பயந்து ஓடுகிறார்கள். 6 ஆண்டுகளுக்கு முன்பு குண்டர்களும், மாபியாக்களும் வணிகர்களை வெளிப்படையாக மிரட்டி கடத்தி வந்தனர். கலவரம், அராஜகங்களுக்கு பெயர் போன இந்த மாநிலத்தில் இன்று அத்தகையவர்கள் எல்லாம் மௌனமாகிவிட்டனர்” என்று கூறினார்.

முன்னதாக, உமேஷ் பால் கொலை வழக்கு சம்பந்தமாக, உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.கவிற்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்றது. சமாஜ்வாடி கட்சி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியது. அப்போது பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் மாஃபியாவை அழிப்பேன் என்று சட்டப் பேரவையில் சபதம் செய்தார். மேலும், “ஒவ்வொருவரின் பாதுகாப்பும் அரசின் பொறுப்பு. குடிமக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவருவதே அரசின் தீர்மானம்” என்று கூறினார். இது நடந்த சில நட்களில், அத்திக் அகமதுவின் கூட்டாளிகள் இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறை அத்திக் அகமதுவின் உதவியாளர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்களை ஒடுக்கியது. இந்த ஆண்டு, ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல மாநிலங்களில் முஸ்லிம்கள் மற்றும் சில கட்சியினரால் திட்டமிட்ட வகையில் கலவரங்கள் நடத்தப்பட்டன. அனால், ​​உத்திரப் பிரதேசத்தில் பூரண அமைதி நிலவியது. அந்த சமயத்தில் சுமார் முப்பத்து மூன்று லட்சம் பேர் ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்திக்கு விஜயம் செய்தனர், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை, அதற்கு பதிலாக, ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஊர்வலத்தின் மீது மலர் மாரி பொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.