சமூக ஊடகங்களின் சார்பு நிலை

சமூக ஊடக நிறுவனமான டுவிட்டர், பாரதத்தில் நிறைய சிக்கல்களை உருவாக்கி வருகிறது. சில சிக்கல்களை சந்திக்கவும் செய்கிறது. பாரத குடியரசுத் துணைத் தலைவர் கணக்கில் நீல நிறக் குறியை அகற்றியது, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டது, டெல்லி காவல்துறையின் விசாரணைகளுக்கு முரட்டுத்தனமாக பதிலளித்தது, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காதது என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்பின் பதிவுகளுக்கும்கூட தடை விதித்தது டுவிட்டர். பயங்கரவாத அமைப்புகள், வன்முறை குழுக்கள் உள்ளிட்டோருக்கு டுவிட்டரில் இடமில்லை என கூறும் அந்நிறுவனம், பயங்கரவாதிகள் என தெரிந்திருந்தும் தலிபான் தலைவர்களின் கணக்கை இன்றுவரை முடக்கவில்லை. ​​அவர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.