ஜஹாங்கிர்புரி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, வன்முறை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்த நீதிமன்றம், ஹிந்துக்கள் தங்கள் மத ஊர்வலத்தை நடத்துவதைத் தடுக்கத் தவறியதற்காக காவல்துறையை குற்றம் கூறியது. மேலும், மூத்த அதிகாரிகள் இந்தப் பிரச்சினை புறக்கணித்துள்ளனர். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், சட்ட விரோத செயல்களை தடுப்பதில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புகள் சீர்செய்யப்பட வேண்டும். ஒருவேளை அவர்களும் இதற்கு உடந்தையாக இருந்தால், அதுவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இதனையடுத்து, ‘ஜஹாங்கிர்புரி வன்முறை வழக்கில் அப்பாவி ஹிந்துக்கள் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளனர். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று டெல்லி காவல்துறை ஆணையரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) வலியுறுத்தியுள்ளது. மேலும், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரால், நகரின் மற்ற 20 இடங்களில் நடத்தப்படும் ஊர்வலத்திற்கு முன் அனுமதி கோரப்பட்டு டெல்லி காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது. இந்த ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து காவல்துறை எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஜஹாங்கிர்புரியில் வன்முறை வெடித்தது காவல்துறையின் செயலற்ற தன்மையால்தான். சில காவல்துறை அதிகாரிகள் இப்போது தங்கள் பாவத்தை மற்றவர்கள் மீது மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த வன்முறையில் அப்பாவி ஹிந்துக்களை வேண்டுமென்றே சிக்க வைக்க காவல்துறை நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று வி.ஹெச்.பி கூறியுள்ளது.