மிரட்டல் விடுத்தவர் கைது

முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு, சொத்துக்களை வழங்குவேன் என கூறிய அஜ்மீர் தர்காவை சேர்ந்த மதகுரு காதிம் சல்மான் சிஷ்டி ஒரு ஆட்சேபனைக்குரிய வீடியோவைப் பகிர்ந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வீடியோ எடுக்கும்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் பரேலியில் வசிக்கும் நசீர் என்ற முஸ்லிம் நபர், நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து அவரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.