குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் பதவியேற்றார். இந்நிலையில், ‘குஜராத் மாநில முதல்வராக அவர் பதவியேற்றது அவமானம், இது குஜராத் மக்களை அவமானப்படுத்தும் செயல். அவருக்கு 14 ஆயிரம் டுவிட்டர் பின்தொடர்பவர்கள் மட்டுமே உள்ளனர்’ என காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச பிரிவு தனது டுவிட்டர் தளத்தில் செய்தி பதிவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இந்த வினோதமான கருத்து, சமூக ஊடகங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டது. இந்த டுவிட்டர் பதிவு காங்கிரசின் மிகக் குறைந்த ஐ.க்யூவுக்காக உலக சாதனையை படைத்துள்ளது, இந்த டுவிட்டர் ஒருவேளை ராகுல் காந்தியின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறதோ என சமூக ஊடக பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பூபேந்திர படேல் குஜராத்தில் உள்ள கட்லோடியா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் படேலை எதிர்த்து 1,17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.