புதிய முதல்வர் பதவியேற்றார்

திரிபுரா பா.ஜ.க தலைவர் மாணிக் சாஹா அகர்தலாவில் உள்ள ராஜ்பவனில் மாநில முதல்வராக பதவியேற்றார். முன்னதாக முதல்வர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததையடுத்து அவருக்கு பதிலாக டாக்டர் மாணிக் சாஹா முதல்வராக நியமிக்க பா.ஜ.க முடிவு செய்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாக அம்மாநிலத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. பல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மாணிக் சாஹா, ராஜ்யசபா எம்.பி மற்றும் திரிபுரா மாநில கட்சித் தலைவராக உள்ளார். மாணிக் சாஹா காங்கிரஸில் இருந்து விலகி 2016ல் பா.ஜக.வில் இணைந்தார். அவர் 2020ல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில், தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் சமர்ப்பித்த பிறகு, திரிபுரா மக்களுக்கு முழு மனதுடன் சேவை செய்ததாக பிப்லப் குமார் தேப் கூறினார். கடந்த 2018ல் திரிபுராவின் முதல் முதலமைச்சராக பிப்லப் பதவியேற்றார். இதனையடுத்து அங்கு 25 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.