சி.ஏ.ஏ சட்டத்தின் அவசியம்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மக்களுக்கு, நம் நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லி உட்பட பல இடங்களில் வன்முறை போராட்டங்களை முஸ்லிம் அமைப்புகள் அரங்கேற்றின. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் நுாற்றுக்கணக்கான ஹிந்து, சீக்கியர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இது போன்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே, நாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றினோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.