சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், பான்சி மாசபாரா கிராமத்தில் நக்சல்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டது. தற்போது சரணடைந்த இவர்கள் அப்பள்ளியை மீண்டும் கட்டி, புதிய வண்ணம் தீட்டி புத்துயிர் அளித்துள்ளனர். அவர்கள் சரணடைந்தபோது, என்ன செய்ய விரும்புகிறீர் கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் இடித்த பள்ளிக் கட்டடத்தை மீண்டும் கட்டுவதில் ஈடுபட்டு, அதிலிருந்து வரும் கூலித் தொகையில் தங்கள் வாழ்க்கையை துவங்க விரும்புவதாகக் கூறினர். பள்ளி கட்டுமானப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒப்புதல் வழங்கியது. தற்போது இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது பள்ளிக்கு ஒரு சாலையையும் புதிய அங்கன்வாடி மையத்தையும் கட்டி வருகின்றனர்.