கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநில அரசு, மக்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது, அதன்படி, கொரோனாவால் இறக்கும் நபரின் உடலை பாதுகாக்கவும் வண்டியில் எடுத்து செல்வதற்கும் அவரது குடும்பத்தினர் ரூ. 2,500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சத்தீஸ்கரின் சுகாதாரத் துறை செயலாளர் ஏற்கனவே செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சத்தீஸ்கர் அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக பா.ஜ.க, ஆளுநரிடம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.