நக்சலைட்டுகள் தியாகிகள் வாரத்தை அனுசரிக்கும் அதே நேரத்தில், சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரிடம் மாவோயிஸ்டுகளின் மலங்கிர் பகுதி கமிட்டியின் பெண் மாவோயிஸ்ட் பயங்கரவாதி ரம்பதி பார்சே உட்பட 11 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொள்ளையடித்தல், காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு, வாகனங்களுக்கு தீ வைத்தல், பாலம் தகர்ப்பு உள்ளிட்ட பல கொடூர செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். முன்னதாக, கடந்த வாரம், நான்கு நக்சல் பயங்கரவாதிகள் சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் சரணடைந்தனர்.
பிஜப்பூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்த பயங்கரவாதிகளை முடக்க பாதுகாப்புப் படைகள் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. மறுபுறம், கடந்த 11 மாதங்களாக, மாவோயிஸ்டுகள் தங்கள் பயங்கரவாத செயல்களை விடுத்து வீடு திரும்புவதற்காக ‘லோன் வரது’ என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இது நல்ல பலன் அளித்துள்ளது. இதுவரை 397 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.