ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை இந்த ஆண்டு மே 1ம் தேதிக்குள் முழுமையாக வெளியேற்றுவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. துருப்புக்கள் முழுமையாக திரும்பப் பெறுவது தலிபான்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் வழிவகுக்கும் என அங்குள்ள மக்கள் என்று பலர் அஞ்சுகிறார்கள். இந்நிலையில், முஸ்லிம் பயங்கரவாதிகள் பழிவாங்கலுக்கு அஞ்சி அங்கு வாழும் கடைசி யூதரான சபுலோன் சிமந்தோவ் விரைவில் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற உள்ளார். 1961ல் ஹெராட்டில் பிறந்த சிமந்தோவ் தனது குழந்தை பருவத்திலேயே காபூலுக்கு குடிபெயர்ந்தார். 1992ம் ஆண்டில், தலிபான்களால் உயிருக்கு அஞ்சி தஜிகிஸ்தானுக்கு தப்பிச்சென்றர். தாலிபான்கள் ஒடுக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் காபூலுக்குத் திரும்பினார். அவரது மனைவியும் இரண்டு மகள்களும் 1998ல் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். இவர், சுமார் நான்கு தசாப்தங்களாக காபூலில் யூத வழிபாட்டுத் தலத்தை பராமரித்து வருகிறார். ஆப்கானிஸ்தானின் யூத வரலாறு சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. ஹெராத் நகரம் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான யூதர்களின் வசிப்பிடமாக இருந்தது, ஆனால் முஸ்லிம் பயங்கரவாதத்தால் பலரும் உயிரிழந்தனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். சிமந்தோவ்வின் வெளியேற்றம், ஆப்கானிஸ்தானின் யூத வரலாற்றிற்கு முற்றுப்புள்ளை வைத்திருக்கிறது.