உத்தரபிரதேசம் நொய்டா மாவட்டத்தில் உள்ள ஜெவார் நகரில் யமுனா சர்வதேச விமான நிலையம் (YIAPL) என்ற தனியார் சர்வதேச விமான நிலைய கட்டுமானப்பணி துவக்கப்பட்டது. இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும் என கூறப்படுகிறது. YIAPL, சூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனலின் துணை நிறுவனம் ஆகும். முதல் கட்டமாக 1,334 ஹெக்டேர் நிலத்தில் கட்டுமானப்பணிகள் துவக்கப்படுகிறது. இது முதலில் ஒரு ஓடுபாதையுடன் செயல்பாடுகளைத் தொடங்கும். பின்னர், ஓடுபாதைகள் ஒவ்வொன்றாக சேர்க்கப்படும். ஒவ்வொரு கட்டத்திலும், பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி, போக்குவரத்துக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். 4ம் கட்டத்தின் முடிவில் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் 8 ஓடுபாதைகளுடன் 70 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் விரிவடையும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.