வலிமையின் மொழி

120 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் கலந்து கொள்ளும் சீனாவின் நான்காவது சர்வதேச ஏர்றுமதி இறக்குமதி கண்காட்சி (CIIE) சீனாவில் நேற்று துவங்கியது. இதனை சீன அரசே நேரடியாக நடத்துகிறது. இதில் பாரதத்தில் இருந்து எந்த நிறுவனமும் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் இந்த கண்காட்சியில் சிறப்புப் பார்வையாளராக அழைக்கப்பட்ட 15 நாடுகளில் பாரதமும் ஒன்று. இது சீனாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பாரதத்திற்கான ஏற்றுமதி தற்போது 10.8 சதவீதம் குறைந்து 66.73 பில்லியன் டாலராகவும், பாரதத்தில் இருந்து இறக்குமதி 16 சதவீதம் அதிகரித்து 20.86 பில்லியன் டாலராகவும் உள்ளது. சமீபத்திய எல்லை பிரச்சனையை அடுத்து, இந்த செயல்பாட்டின் மூலம் பாரதம் மிகத்தெளிவான செய்தி ஒன்றை சீனாவிற்கு தெரியப்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. சுதந்திர பாரதத்தின் வரலாற்றில் இதெல்லாம் முதல்முறையாக நடக்கின்றன. உலக நாடுகள் இவற்றை வியப்புடன் பார்க்கின்றன. சீனாவை எதிர்க்க பாரதம் ஒன்றே சரியான தேசமென்று நம் பின்னால் பின்னால் அணிவகுக்கின்றன. ஏனெனில் பாரதம் தற்போது பேசுவது உண்மையான தேசப்பற்றின் மொழி, அது வலிமையின் மொழி.