கிராமத்தில் வசிப்பவர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 9) காலை கோவில் வளாகத்திற்குள் குருவின் உடல் இரத்தத்தில் கிடப்பதை கண்டுபிடித்தனர். சம்பவம் நடந்த கோவில், உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில் உள்ள நக்லா ஜாக்ரூப் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் வளாகத்திற்குள் கடந்த சனிக்கிழமை அன்று அக்கோயிலின் பூஜாரி கிர்பால் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை விசாரித்த காவல்துறையினர், ரசாக் என்பவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய கோடாரியையும் கைப்பற்றினர். குற்றம் சாட்டப்பட்ட ரசாக், பூஜாரி கிர்பாலுடன் ரசாக் ஒன்றாக வசித்து வந்துள்ளார். கிராமவாசிகள் ரசாக்கை பாபா சாது என்று அழைத்து வந்தனர். சம்பவம் நடந்த தினத்தன்று இரவு உணவின்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்றும் அதனால் ரசாக், கோடரியால் பூஜாரியை கொடூரமாக கொன்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.