‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பார்வையாளர்கள், வசூல் என தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்து வரும் நிலையில், கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அதன் பின்னணிகள் குறித்த ஒரு திரைப்படத்தை தயாராகி வருகிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ என பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தை சுதிப்தோ சென் எழுதி இயக்கியுள்ளார். இப்படம், கடந்த 12 ஆண்டுகளில் கேரளாவில் இருந்து காணாமல் போன சுமார் 32,000 சிறுமிகளின் கதையை விவரிக்கிறது. இப்படத்தின் டீஸர், ‘உங்கள் மகள் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை என்றால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? என்ற ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது. பயங்கரவாதக் குழுவான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவால் கேரளாவில் நடைபெறும் பயங்கரவாதங்கள் குறித்து முன்னாள் முதல்வர் வி.எஸ் அச்சுதானந்தன் பேசுவதையும் டீஸர் காட்டுகிறது.
இப்படம் குறித்து பேசிய சுதிப்தோ சென், “சமீபத்திய விசாரணையின்படி, 2009 முதல், கேரளா, மங்களூருவைச் சேர்ந்த ஹிந்து, கிறிஸ்தவ சிறுமிகள் சுமார் 32,000 முஸ்லிம்மாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ், ஹக்கானி செல்வாக்குமிக்க பகுதிகளுக்கு கடத்தப்பட்டுள்ளனர். இந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டாலும், ஐ.எஸ்.ஐ.எஸ்சின் குழுக்களால் நடத்தப்படும் இத்தகைய மிகப்பெரிய சர்வதேச சதிகளுக்கு எதிராக எந்த செயல் திட்டத்தையும் அரசு சிந்திக்கவில்லை. தற்போது நமது நாட்டில் நடைபெறும் பெரும்பாலான படுகொலைகளின் மையப்பகுதியாக கேரளாவும் மங்களூருவும் உள்ளன. 32,000 பேர் காணாமல் போனாலும், என்.ஐ.ஏ வெறும் 99 வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறது. ஆழமான வேரூன்றிய வலைப்பின்னல் மூலம் பரவலான மத மாற்றம் கேரளாவை காட்டுத்தீ போல் கைப்பற்றியுள்ளது. எங்கள் ஆராய்ச்சிக்காக, பிராந்தியம் முழுவதும் பயணம் செய்கையில் ஓடிப்போன சிறுமிகளின் தாய்மார்களின் கண்ணீரை கண்டோம். ஓடிப்போனவர்களில் சிலரை ஆப்கன், சிரியாவின் சிறைகளில் கண்டோம். பெரும்பாலான சிறுமிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுள்ளனர். இருண்ட எதிர்காலம் மட்டுமே அவர்களுக்காகக் காத்திருக்கிறது. இந்த படம், பெண் குழந்தைகளை இழந்த அனைத்து தாய்மார்களின் அழுகையை கேட்க முயற்சிக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா பேசுகையில், “இந்தக் கதை உங்களை மையத்தை உலுக்கும். சுதீப்தோ என்னிடம் வந்து 4 வருடங்களுக்கும் மேலான தனது ஆராய்ச்சியுடன் கதையை விவரித்தபோது நான் அழுதுவிட்டேன். அன்றே இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். படத்தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. நடந்த நிகழ்வுகளின் உண்மையான, எவ்வித சார்புமற்ற கதையை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்” என கூறினார்.