ஐ.ஆர்.எப் ஒரு சட்டவிரோத அமைப்பு

இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் பாரதத்திலும் வெளிநாட்டிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டுவதாக உள்ளது. அவை மதக் குழுக்களிடையே பகை, வெறுப்புணர்வை வளர்க்கின்றன. ஐ.ஆர்.எப் அமைப்பின் சட்டவிரோத செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அதன் நாசகார நடவடிக்கைகளைத் தொடரும், மத நல்லிணக்கத்தை குலைத்துவிடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐ.ஆர்.எப்) சட்டவிரோதமான அமைப்பு என மத்திய அரசு அறிவித்தது. தடையை எதிர்த்து ஐ.ஆர்.எப் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரிக்க உபா தீர்ப்பாயத்தை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்தது. இவ்வழக்கை விசாரித்த உபா தீர்ப்பாயம், மத்திய அரசின் முடிவை உறுதிப்படுத்தியது. ஐ.ஆர்.எப் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க போதுமான காரணங்கள் இருப்பதாக தீர்ப்பாயம் கூறியது.