கிழக்கு லடாக்கின் உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், பாரதம் சாலை அமைத்துள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்ட இந்த தார் சாலை, அனைத்து வானிலைக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட தேசம் என்ற பெருமையை நமது பாரதம் பெற்றுள்ளது. பொலிவியாவில் 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை கொண்டிருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை லடாக்கின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் என்பதால் இது அங்குள்ள மக்களுக்கு ஒருவரப்பிரசாதம். சுற்றுலா, சமூக பொருளாதாரம் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீனா எல்லையில் பிரச்சனை செய்து வரும் நிலையில், படைகளையும் ராணுவத் தளவாடங்களையும் விரைவாக நகர்த்த இந்த சாலை பயன்படும் என்பதால், இது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.