பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசு, கொரோனா தடுப்பு மருந்தை ரூ.400க்கு வாங்கி, அதனை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,060க்கு விற்கிறது.இதற்காக தனியாக வங்கிக் கணக்கும் ஆரம்பித்துள்ளது.இந்த முறையற்ற விற்பனையால், அம்மாநில அரசு ஒரு டோசுக்கு ரூ.660 லாபம் ஈட்டுகிறது.இதனை வாங்கும் தனியார் மருத்துவமனைகள் அதனை, ஒரு டோஸ் ரூ.1,560க்கு விற்கின்றனர்.அதனால் அவர்களுக்கு ரூ.500 லாபம் கிடைக்கிறது.பாரத் பயோடெக்கிடம் இருந்து வாங்கிய ஒரு லட்சம் டோஸ் குப்பிகளில் இருந்து இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மக்கள் நிதியுதவி செய்ய பஞ்சாப் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.அதிலும், அரசு லாபத்தை ஈட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாநில அரசின் தடுப்பூசி மையங்களில் நிலவும் கடும் பற்றாக்குறையால் பல மையங்கள் மூடப்பட்டுள்ளன.சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி காங்கிரஸ் அரசு இப்படி வெட்கக்கேடான முறையில் லாபம் ஈட்டுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.