வெற்றியின் பொன்விழா

இந்தியா கேட் பகுதியில் இரண்டு நாள் ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ எனப்படும் ‘வெற்றியின் பொன்விழா’ தினத்தை நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். 1971ம் ஆண்டில் பாரதம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க போர் வெற்றி மற்றும் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவைக் குறிக்கும் வகையில், ‘வெற்றியின் பொன்விழா தினம்’ டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில், டெல்லியின் இந்தியா கேட்டில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் 1971 போரின் முக்கிய நிகழ்வுகளுடன், அப்போது பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் நிறைவு நிகழ்ச்சி, டிசம்பர் 13ல் நடைபெறுகிறது. அன்று ராஜ்நாத் சிங் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். ஜெனரல் பிபின் ராவத் மறைவை முன்னிட்டு இந்நிகழ்ச்சி எளிமையாக கொண்டாடப்பட்டது.