அசாமில் கடந்த மே 24 அன்று, கச்சார் மாவட்டத்தில் உள்ள நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெத்துகண்டியில் உள்ள தடுப்பணையை சில மர்ம நபர்கள் உடைத்தனர். இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் கச்சார் மாவட்டத்தை மோசமாக பாதித்தது. சில்சார் நகரின் பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன. பராக் பள்ளத்தாக்கில் 14 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த குற்றவாளிகள் மீது நீர்வளத் துறை காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து விசாரித்துவந்த காவல்துறையினர் முதல்கட்டமாக, காபூல் கான், மிது ஹுசைன் லஸ்கர், நசீர் உசேன் லஸ்கர் மற்றும் ரிப்பன் கான் ஆகிய நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நட்த்தப்பட்டு வருகிறது. முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில்சார் நகரை பார்வையிட்ட அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பேரழிவு தரும் வெள்ளத்தை மனிதர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள். பெத்துகண்டி சம்பவம் எங்களுக்கு ஒரு பெரிய பாடம். அடுத்த முறை வெள்ளம் வரும்போது, அணையை யாரும் உடைக்காமல் இருக்க, தடுப்பணையில் காவலர்களை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். சில்சார் நகரில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய கரை இடிந்து விழுந்ததற்குக் காரணமானவர்கள் ஆறு பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்ததுடன் அவர்கள் பெத்துகண்டி அணையை சிலர் சேதப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டார்.. பிரதான குற்றவாளியான காபூல் கான், அணை உடைக்கப்பட்டதை வீடியோவாக படம்பிடித்துள்ளார். மாற்று மத்த்தவரை கொல்ல, மதமாற்றம் செய்ய, அதிகாரத்தை கைப்பற்ற, பழிதீர்க்க என பல காரணங்களை முன்னிட்டு சில முஸ்லிம் அமைப்புகள் செயல்படுத்தும் லவ் ஜிஹாத், நில ஜிஹாத், கடன் ஜிஹாத், கல்வி ஜிஹாத் போன்றவற்றின் வரிசையில் தற்போது அணையை உடைத்து மக்களை மொத்தமாகக் கொல்லும் இந்த வெள்ள ஜிஹாத்தும் அவர்கள் செயல் திட்டத்தில் உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.