கொடியேற்ற எதிர்ப்பு நீங்கியது

நமது பாரத தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள தீவுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாட ராணுவ அமைச்சகம் திட்டமிட்டது. எனினும், தெற்கு கோவாவில் உள்ள சாவோ ஜசின்டோ என்ற தீவில் மூவர்ணக் கொடியை ஏற்ற, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக, இந்திய கடற்படை அறிவித்தது. எனினும் திட்டமிட்டப்படி தீவில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை நடத்த, கோவா மாநில முதல்வர் பிரமோத்சாவந்த், கடற்படை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். ‘தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இதையடுத்து, ‘தீவில் கொடி ஏற்ற, தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அத்தீவில் கொடியேற்றப்பட்டது.