வந்தே பாரதம் நாட்டிய உத்சவம்

பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும் வகையில், பாதுகாப்பு அமைச்சகமும், கலாச்சார அமைச்சகமும் இணைந்து மேற்கொண்டுள்ள தனித்துவமான முன்முயற்சி ‘வந்தே பாரதம் நிருத்திய உத்சவம்’ ஆகும். இதன் இறுதிப்போட்டி, நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு மைதான அரங்கில் நடைபெற்றது. இதில் நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 73 குழுக்களின் 949 நடனக்கலைஞர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் வெல்பவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவதை பாரதம் மட்டுமல்லாமல் உலகமே கண்டு மகிழும். இந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியில், கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா துறை இணையமைச்சர் அஜய் பட், பிரபல நடிகர்கள், நடனம் மற்றும் இசை நிபுணர்கள் இலா அருண், சோவனா நாராயண், ஷிபானி காஷ்யப், சோனல் மான்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.