உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கத்கர்ஹி கிராமத்தை சேர்ந்தவர் பாபர் அலி. இவர் பா.ஜ.கவுக்காக பிரச்சாரம் செய்தார். உ.பி தேர்தலில் யோகி ஆதித்திய நாத் பெரும் வெற்றியை பெற்று மீண்டும் முதல்வர் ஆனதை அறிந்த பாபர் அலி தனது சுற்றுப்புறத்தில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். இது அவரது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும் பிடிக்கவில்லை. அவரை பா.ஜ.கவில் இருந்து விலகுமாறு அவர்கள் எச்சரித்தனர். பாபர் அதற்கு இணங்கவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தேச வளர்ச்சிக்கான முயற்சிகளை குறித்து நியாயமான பகுப்பாய்வு செய்யுமாறு அவர்களை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பாபர் அலி தனது கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது முஸ்லிம் மதவெறி கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கிக் கொன்றது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆரிப் மற்றும் தாரிக் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் கொலையில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அலியின் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ளூர் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பி.என் பதக் உறுதியளித்தார்.