வெளிப்பட்ட உண்மை முகம்

உத்தர பிரதேசம் அலிகரின் நூர்பூரில் ஒரு முஸ்லிம் வன்முறை கும்பல், அங்குள்ள பட்டியலினத்தர்களைத் தாக்கி, அவர்களின் வீடுகளை விட்டு துரத்தினர். இது நடைபெற்ற சில நாட்களில், அசாசுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை சேர்ந்த சையத் நஜிம் அலி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பா.ஜ.கவின் சகுந்தலா பாரதியின் கருத்துக்கு பதிலளித்ததார். அப்போது, ​​’ஆம், நமாஸ் நடக்கும்.நாங்கள் ஹிந்துக்கள் அனுமதியின்றி திருமண ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க மாட்டோம்.நீங்கள் எங்களின் அனுமதியின்றி திருமண ஊர்வலங்களை நடத்தினால், அதை நாங்கள் தடுப்போம்.உங்களால்முடிந்ததை நீங்கள் செய்துகொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

கடந்த மே 26 அன்று, இரண்டு திருமண ஊர்வலங்கள் ஒரு மசூதி வழியாக சென்ரபோது அங்கிருந்த முஸ்லிம்கள் அவர்களைக் கொடூரமாக தாக்கினர்.இதனால், ஹிந்துக்கள் பாதியிலேயே திரும்பிவிட்டனர்.கடந்த வாரம், முஸ்லிம் குண்டர்கள் நூர்பூரில் ஹிந்துக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.அங்கிருந்து வெளியேற மிரட்டப்பட்டனர்.அதனால் அங்குள்ள ஹிந்துக்கள் தங்கள் வீடுகளை விற்பனைக்கு என்று எழுதி வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். மேற்கு உத்தரபிரதேசத்தில் முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள கொண்ட நூர்பூர் கிராமத்தில், சுமார் 800 முஸ்லிம் குடும்பங்களும் 125 ஹிந்து குடும்பங்களும் வசிக்கின்றன. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும், அந்த ஹிந்துக்களில் பெரும்பாலோர் பட்டியல் சாதியான ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.