ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க மூத்த பிரச்சாரகர் ஓம் பிரகாஷ் கர்க், பாட்னாவில் தனது 96வது வயதில் காலமானார். நீண்ட வருடங்கள் பிரச்சாரகராக செயலாற்றியவர். பீஹார் மாநிலத்தின் மாநில அமைப்பாளர், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத துணைத் தலைவர் என பல பொறுப்புகளில் தேசப்பணி புரிந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு நமது அஞ்சலிகள்.