விவசாயிகளை ஏமாற்றும் விடியல்

பா.ஜ.க மாநில விவசாயிகள் அணித் தலைவர் நாகராஜ், பேசுகையில், ‘தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் காவிரி விஷயத்தில் போராட்டம் நடத்தினர். ஆனால், 142 அடி எட்டுவதற்குள் அக்டோபர் 28ல் முல்லைப் பெரியாறு அணையில் கேரளாவு நீர் திறந்தபோது அமைதி காத்தனர். இதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டித்ததால், தமிழக அரசு நீர் திறந்ததாக அமைச்சர் துரைமுருகன் சப்பைக்கட்டு கட்டினார். முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீர் திறந்ததாக வரலாறு இல்லை. ஆனால், அது தற்போது மாறிவிட்டது. இதுதான் விடியல் அரசா? 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையில் கேரளா, தமிழக அரசு விளையாடுகிறது. விடியல் அரசு விழிக்காததால் அணை கட்டுப்பாடு தமிழகத்தை விட்டு சென்றுள்ளது. பெரியாறு அணைப்பகுதியில் புது அணை கட்டத் தேவை இல்லை. நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதால் முன்கூட்டியே அணையில் கேரளா நீர் திறந்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தை நாடுவோம். நவம்பர் 8ல் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.