காலத்தின் கொடுமை

மேற்கு வங்காளத்தில் ஹிந்துக்களால் நவராத்திரி விஷேஷமாகக் கொண்டாடப்படும். வீதிக்கு வீதி துர்கை சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படும். மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி ஆட்சியில் நடைபெறும் ஹிந்துக்கள் மீதான அடக்குமுறைகள், கொலைகள், முஸ்லிம்களின் மீதான அதீத பாசம் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் தேர்தலுக்குப் பிறகு இவரது கட்சியினர் நடத்திய வன்முறைகளும் அதற்கு மமதா அளித்த ஆதரவும் அனைவரும் அறிந்ததே. இது குறித்து தற்போது நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ, எஸ்.ஐ.டி அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மமதாவை துர்கையாக சித்தரித்து சிலைகளை வைக்க மூன்று கமிட்டிகள் முடிவு செய்துள்ளன. ‘நஸ்ருல் பார்க் உன்னயன்’ சமிதியின் துணைத் தலைவர் பார்த்தா சர்க்கார், ‘மேற்கு வங்கத்தினர் மமதாவை துர்கா தேவியாகக் கருதுகின்றனர். அவர் மக்களுக்கு செய்த நன்மைகளை உலகில் வேறு யாரும் செய்ததில்லை’ என கூறியுள்ளார். அரசியல், அதிகார செல்வாக்கால் நடைபெறும் இது போன்ற கேலிக்கூத்துக்கள், ஹிந்துக்களை வேதனைப்படுத்தியுள்ளது.