திரிபுராவில் பா.ஜ.க சார்பில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து பேசுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியை நீதிமன்ற வழக்குகள் மூலம் காங்கிரஸ் கட்சி தடுத்து வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அங்கு கோயில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வரும் 2024 ஜனவரி 1ம் தேதி, அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும். பிரதமர் மோடியின் கைகளில் நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. பிரதமர் மீது திரிபுரா மக்கள் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். திரிபுராவில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.