உக்ரைனில் இருந்து நமது பாரத மாணவர்களை மீட்கும் நடவடிக்கையான ஆபரேஷன் கங்காவை தி.மு.க தொடர்ந்து அரசியலாக்கி ஆதாயம் தேடி வருகிறது. முன்னதாக தமிழக மாணவர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றுவதற்காக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப உள்ளதாக தி.மு.க அரசு ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியது. இது தேசம் முழுவதுமுள்ள மக்களின் கண்டனத்துக்கு ஆளானது. மேலும், மக்கள் மனதில் ஸ்டாலின் ஒரு முதல்வராக இல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகராக மாறிப்போனார். இந்நிலையில் தற்போது, ‘மத்திய அரசு தென்பாரத மாணவர்களை விட வடபாரத மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது’ என தி.மு.க கூறியுள்ளது. டைம்ஸ் நவ் விவாதத்தில் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் இதனை தெரிவித்துள்ளார். எனினும் அவரது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. இதனை வழக்கமான அவரது உளரலாக எடுத்துக்கொள்வதா அல்லது தி.மு.க செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் இதனை தி.மு.கவின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்வதா? தி.மு.க தலைமைதான் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.