சி.பி.ஐ விசாரிக்க தடையில்லை

மைக்கேல்பட்டியில் தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி, அப்பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க அரசு மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனை தமிழக அரசு கௌரவப் பிரச்னையாக கருதக்கூடாது என்று கண்டித்துள்ளது. மேலும், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் தலையிடுவது முறையாகாது என்றும் கருத்து கூறியுள்ளது.