தி பிரிண்ட் என்ற செய்தி நிறுவனத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் எழுதியுள்ள கட்டுரையில், ‘புர்கா மற்றும் ஹிஜாப் என்பது ஒரு பெண்ணின் விருப்பத் தேர்வாகமாக இருக்க முடியாது. அரசியல் இஸ்லாம் போலவே, புர்கா, ஹிஜாபும் இன்று அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் இஸ்லாம் போலவே, புர்கா, ஹிஜாபும் இன்று அரசியல் ஆக்கப்படுகிறது. பர்தா என்பது இருண்ட காலத்தில் இருந்த கற்பு பெல்ட் போன்றது. இதனை பெண்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் ஹிஜாப் மற்றும் புர்காவுக்கு எதிரானவள். பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஆணாதிக்க சதி என்று நான் நம்புகிறேன். இந்த ஆடைகள் பெண்களின் மீதான அடக்குமுறை மற்றும் அவமதிப்புச் சின்னங்கள்’ என கூறியுள்ளார். அக்காலத்தில் உலகின் சில பகுதிகளில், பெண்கள் வேறு யாருடனும் உறவில் ஈடுபடாமல் இருக்க, அவர்களின் இடுப்பில் ஒரு இரும்பு பெல்ட் அணிவிக்கப்பட்டு பூட்டப்படும். அதன் சாவியை கணவர் பத்திரமாக வைத்துக்கொல்வார். இது கற்பு பெல்ட் என அழைக்கப்பட்டது. இது பெண்களை நம்பாமல் அவமானப்படுத்தும் விதத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.