மத்தியப் பிரதேசத்தில் ஸ்ரீராமர் ஊர்வலத்தின்போது கலவரம் செய்த முஸ்லிம்களின் சட்டவிரோத கட்டுமானங்கள் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டன. இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ராவுடன் என்.டி.டி.வியின் பர்கா தத் நேர்காணல் நடத்தினார். நேர்காணலில் பதில் அளித்த அமைச்சர், அவர்கள் சமூக விரோதிகள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அவலப்படுத்துகிறார்கள். அவர்கள் வீடுகளையும் பொருட்களையும் எரித்தனர், பலர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர், ஒரு எஸ்.பி அவர்களால் சுடப்பட்டார் இப்படிப்பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்? காவல்துறையும் நீதிமன்றமும் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் இருப்பினும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை கலவரக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையும் நீதிமன்றமும் நீதி வழங்கும் என்று நினைத்து நடவடிக்கை எடுக்காத பல மாநிலங்கள் கலவரத்தை சந்திக்கின்றன. உத்தபரப் பிரதேசத்தில் 900 ஊர்வலங்கள் நடந்தன, ஆனால் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அரசின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் அனைத்து சட்ட ஆவணங்களும் முடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மட்டும்தான் இடித்துத் தள்ளப்பட்டன. கலவரக்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் என இருவருக்கும் சேர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த செயலில் நான் திருப்தி அடைகிறேன். மீண்டும் கலவரம் நடந்தால் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஜாதி, மதம் என்ற பார்க்காமல் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.